அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சின்மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

Wednesday, August 22, 2012

நான்தான் மகாகவி பாரதியார்

நான் தமிழ்நாட்டில் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தேன். தமிழ்ர்கள் என்னை ‘மகாகவி” என்று அழைப்பார்கள். நான் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும் பத்திரிக்கை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளேன். நான் தமிழ், ஆங்கிலம், பிரங்சு மொழிகளைக் கற்றேன். வடமொழியிலும் திறம் பெற்று விளங்கினேன். அவற்றுள் வல்லமை வாய்ந்தது தமிழ்.

 கவிதை இயற்றுவது எனது முக்கியத் தொழில். நான் ஏழாவது வயதிலேயே தமிழ்ல் பாடல்கள் எழுதத் தொடங்கினேன். நான் பாடல்களை எழுதுவதில் சிறந்து விளங்கினேன். என் பாடல்கள் மிகவும் எளிமையானவை. அவை படிப்பவர் உள்ளத்தைக் கவரும் இயல்பு உடையவை. அவற்றைச் சிறியோரும் பெரியோரும் இன்றும் விரும்பிப் படிக்கிறார்கள்.

 மாணவமணிகளே, உங்களுக்காக நான் சில புதிய ஆத்திசூடி பாடல்களை விட்டுச் சென்றுள்ளேன். அவற்றைப் படியுங்கள்; வாழ்ககையில் கடைப்பிடியுங்கள். இதோ அவற்றுள் சில:


1. இளைத்தல் இகழ்ச்சி
2. ஊண்மிக விரும்பு
3. ஐம்பொறி ஆட்சிகொள்
4. ஏறு போல் நட
5. ஆண்மை தவறேல்



Tuesday, August 14, 2012

பாரதியார்


சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர்.

தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர்மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.